தங்களின் வருகை நல்லதாகட்டும்

நமது வலைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்படுத்தல் பணிகள் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.. விரைவில் புதுப்பொழிவுடன் தோற்றமளிக்கும்...

வாழ்க வளமுடன்

நமது வலைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்படுத்தல் பணிகள் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.. விரைவில் புதுப்பொழிவுடன் தோற்றமளிக்கும்...

இந்த நாள் இனியதாகட்டும்

நமது வலைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்படுத்தல் பணிகள் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.. விரைவில் புதுப்பொழிவுடன் தோற்றமளிக்கும்...

தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை எதிர்ப்பார்க்கிறோம்

நமது வலைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்படுத்தல் பணிகள் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.. விரைவில் புதுப்பொழிவுடன் தோற்றமளிக்கும்...

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி

நமது வலைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்படுத்தல் பணிகள் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.. விரைவில் புதுப்பொழிவுடன் தோற்றமளிக்கும்...

11 May 2012

காதல் காதல் மட்டும்....

புல்லாங்குழல் ராகம் இசைக்கின்றது
பெண் மான் மயில் தேகம் அசைக்கின்றது
விண்ணோடு மண்சேர்ந்து கலக்கின்றது
தண்ணீரும் தேனாக சுவைக்கின்றது

அருகே நீ வந்தால் ரசிப்பேன் உலகை - உன்
மனதை நீ தந்தால் பறப்பேன் வெளியில்
கலையே நீ என்றால் வடிப்பேன் சிலையை - உன்
மனதில் நான் என்றும் இருப்பேன் துடிப்பில்

நான் நீயாக மாறிட ஓர் காதல் வரம் ஒன்று வேண்டும்
நீ நான் என்று சொல்லிட மனம் வாச மலரொன்றை பூக்கும்
நாம் ஒன்றாக கூடினால் அந்த மேகம் பூ தூறல் போடும்
நீ என்னோடு பேசினால் என் நெஞ்சில் பனிக்காற்று வீசும்

காலம் செய்யாத மாற்றத்தை நம் காதல் உருவாக்குமோ
காதல் கொண்டாடும் நேரம்தான் மன மாற்றம் உண்டாகுமோ 
காதல் செய்யாத மானுடம் தனை பூமிதான் தாங்குமோ
காதல் செய்கின்ற போதுதான் உயிர் காற்றும் உண்டாகுதோ

----------------------------------------------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்...

அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..

விதியின் சதியில்...

நித்திம் நித்தம் நினைவிலே
நாட்கள் போனது
நெருப்பிலே நிற்கும் நொடி
வாழ்க்கையானது
எண்ணி எண்ணி கனவிலே
காலம் போனது 
கருவிலே என்தன் காதல்
கலைந்துபோனது

தத்தளித்து தவித்திடும்
ஓடம் ஆனது
கரையில்லா வாழ்விலே
மூழ்கிப்போகுது
காதல் சொல்லத் தோன்றிய
தேதி வந்தது
சொல்லும் முன்னே
வார்த்தைதான் ஊமையானது
---------------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்...

அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..

காயங்கள் ஆறாதோ...

காலம் செய்த காயம்
மனமெங்கும் பரவி கிடக்க - அதை
கொத்தும் கழுகாய் சில நினைவுகள்

ஏனோ என்ற கேள்வி
ஆயிரங்கள் மனதில் இருக்க - எனை
தேற்றும் பதிலாய் பல கேள்விகள்

வாழ்கை தந்த சோகம்
கானகமாய் பயத்தில் தள்ளிட - இனி
தோற்கும் உரமாய் மன கருவிகள்

மோகம் செய்த சோகம்
நினைவெங்கும் மிரட்டி நின்றிட - ஒரு
நொடியில் தள்ளாடும் ரண பொழுதுகள்

நோகும் நேரம் போகும்
மனமெங்கும் வரட்சி செய்திடும் - பல
பிழைகள் சென்றோடும் சுக தருணங்கள்

வருமா பார்க்கிறேன் வரவேண்டி கேட்கிறேன்  

------------------------------------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்..

அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..

20 April 2012

காத்திருப்பு ..........

அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..

காற்றை நான் தூது விட்டேன்
என் கண்ணாளனே
பதிலும் நீ சொல்வாயோ ?

தென்றல் என்னைத் தீண்டி
உன் சேதி சொல்லவே
நான் காத்திருந்தேன்
அந்தி சாயும் மாலைப் பொழுதில்

என்னில் விழும் மழைச் சாரலை
நான் தூது விட்டேன்
என் கண்ணாளனே
பதிலும் நீ சொல்வாயோ ?

வான் நோக்கியே நான் காத்திருந்தேன்
நீ மழைச் சாரலாய் வந்து
பதில் சொல்வாய் என்று

என் தோட்ட மலர்களின்
வாசம் கொண்டு தூது விட்டேன்
என் கண்ணாளனே
பதிலும் நீ சொல்வாயோ ?

மலரைத் தேடி வரும் வண்டிற்காக
காத்திருக்கும் மலரை போல்
நான் மாலை நேரத்து மல்லிகையாய் மாறி
காலையில் கருகியே போனேன்
கண்ணாளா உன் வருகை பொய்யாய் போனதால்

பாற்கடலை நான் தூது விட்டேன்
என் கண்ணாளனே
பதிலும் நீ சொல்வாயோ ?

கரைத் தொட்டு விடும் பாற்கடலாய்
நானும் உன் எண்ணம் தொட்டு விடவே
காத்திருந்தேன் என் கண்ணாளா .....

நீயும் வருவாயோ ?

உன் வரவிற்காக கன்னி நான்
காத்திருக்கும் நேரம்
இவள் உயிர் பிரியும்
வரை மட்டும் அல்லாது
என்னுயிர் பிரிந்தாலும்
உன்மேல் கொண்டுள்ள காதல்
என்றும் அழியாது .......
------------------------------------------------------------------------

காதலுடன்

நித்யஸ்ரீ...

ஏக்கம்...!

அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..

வருவாயா நீ வருவாயா?

வானில் தேயும் நிலவாய் அல்ல - என்
விழிகளில் இருக்கும் கருவாய்..
மண்ணில் விழும் விதையாய் அல்ல - என்
மனதில் எழும் எண்ணங்களாய்..

கனவில் வரும் கானல் நீராய் அல்ல - என்
நினைவில் என்றும் ஜீவ நதியாய்..
தீண்டிச் செல்லும் தென்றலாய் அல்ல - நான்
சுவாசிக்கும் மூச்சுக் காற்றாய்..
சுட்டெரிக்கும் சூரியனாய் அல்ல – என்
தாகங்களை எரிக்கும் நெருப்பாய்..

வருவாயா நீ வருவாயா ?

என் சேலைச் சோலைக்குள்
உன்னை ஒளித்துக் கொள்வேன்..
என் உள்ளங்கையில் ரேகையாய்
உன்னைப் பூட்டிக் கொள்வேன்..

என் கொலுசுகளின் சலங்கையாய்
உன்னை மாட்டிக் கொள்வேன் 

நீ வருவாய் வருவாய் என
காத்திருந்த காலங்கள்
கரைந்தோடியதடா...!பார்த்திருந்த நாட்கள்
விரைந்தோடியதடா...!

காத்திருந்தே கற்சிலையானேன் நான் இன்று 
பொய்யாகவே போன உன் வருகை நடப்பதென்று??

 ----------------------------------------------------------------------
அன்புடன் 
நித்யஸ்ரீ

மன்னவனே....!

அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..

முத்து முத்தாய் உன் நினைவுகள்
முத்தாய்ப்பாய் என் கனவினிலே...!
முத்தாய் என் வியர்வையிலே
முத்தாய்க்கும் உன் வாசனை...!

நித்தம் நிலவாய் தோன்றி
என்னை கொள்ளை கொள்பவனே...!
சத்தம் இல்லாமல் முத்தம் தந்து
யுத்தம் செய்து என்னை வெல்பவனே....!

விடியலில் எல்லாம் உன் முகம்
பார்த்தே மலர காத்திருந்தேன்...!
காத்திருந்த மலர் முகம் காண
காலைச் சூரியனாய் ஓடோடி வந்தாய்...!

---------------------------------------------------------------------------------------------------

காதலுடன்

நித்யா...